உக்ரைன் படையெடுப்பை எதிர்த்த பாதிரியார் கைது

படையெடுப்பை எதிர்த்த பாதிரியார்

உக்ரைன் படையெடுப்பை எதிர்த்த பாதிரியார் கைது

ரஷ்யாவில் நேற்று, உக்ரைன் மீதான படையெடுப்புக்கு எதிராக பிரசங்கம் செய்த பாதிரியார் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட உள்ளதாகவும் ஆர்வலர்கள் குழுக்கள்  தெரிவிக்கின்றன.

கராபனோவோ கிராமத்தில் உள்ள ஒரு சிறிய பிரசங்க சபையில் பிரசங்கம் செய்த சிறிது நேரத்திலேயே பாதிரியார் ஜான் பர்டின் கைது செய்யப்பட்டதாக  கூறப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட பாதிரியார் உக்ரைன் நகரங்களில் நடந்து வரும்  தாக்குதல்கள் மற்றும் குண்டுவெடிப்புகள் சம்பந்தமாக உள்ளூர் மக்களுக்கு விவரித்துள்ளார். மேலும், படையெடுப்புக்கு எதிரான புகைப்படங்கள் மற்றும் மனுக்களை திருச்சபை இணையதளத்தில் பகிர்ந்துள்ளார்.

கைது செய்யப்பட்ட பாதிரியார் மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த வாரம் ரஷ்ய நாடாளுமன்றமான டுமாவில், ‘ஆயுதப் படைகளின் பயன்பாட்டை இழிவுபடுத்துதல்’ நடவடிக்கைகள் குற்றம் என்று  அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

படையெடுப்பு தொடங்கியதிலிருந்து, ரஷ்யாவில் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக மோசமான ஒடுக்குமுறை நடைபெற்று வருகிறது. இருந்தபோதிலும் ஆயிரக்கணக்கான மக்கள் ரஷ்யாவில் பல நகரங்களில் உள்ள தெருக்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Tamil News