இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள எரிவாயு தட்டுப்பாட்டால் மக்கள் பாதிப்பு

429 Views

எரிவாயு தட்டுப்பாட்டால் மக்கள் பாதிப்பு

இலங்கையில்  தற்போது கடும் எரிவாயு தட்டுப்பாட்டு ஏற்பட்டுள்ளது. எரிவாயு தட்டுப்பாட்டால் மக்கள் பாதிப்பு அடைந்துள்ளனர்.

இலங்கை டொலர் நெருக்கடிக்கு முகங்கொடுத்து வரும் நிலையில், வர்த்தக வங்கிகளால் கடனுதவி வழங்கப்படாமையால் மூன்று எரிவாயு தாங்கிகள் இலங்கை கடற்பரப்பில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இலங்கையின் பெரும்பாலான பகுதிகளைச் சேர்ந்த மக்கள் அந்தந்தப் பகுதிகளில் எரிவாயு தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவித்துள்ளனர்.

எரிவாயு பற்றாக்குறையால், தொழிற்சாலைகள் மற்றும் பெரிய அளவிலான விடுதிகள், வெதுப்பகங்களின் செயற்பாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. எரிவாயு பற்றாக்குறையால் சுமார் 1000 வெதுப்பகங்கள் ஏற்கனவே தமது செயற்பாடுகளை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இலங்கை வர்த்தக வங்கிகளினால் கடனுதவி வழங்கப்படாமையால் கடந்த 6 நாட்களாக இலங்கை கடற்பரப்பில் மூன்று எரிவாயு தாங்கிகள் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை, எரிவாயு தட்டுப்பாட்டைக் கண்டித்து கடந்த சில நாட்களாக நாட்டின் சில பிரதேசங்களில் பொதுமக்கள் பல போராட்டங்களை முன்னெடுத்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil News

Leave a Reply