திறைசேரியில் இருந்து நிதி களவாடப்பட்டமை குறித்து ஜனாதிபதி கருத்து

இலங்கையின் நிதியமைச்சரான ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பாராளுமன்றத்தில் விசேட உரையாற்றவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவுஸ்ரேலிய கடன் வழங்குநருக்கு திறைசேரியால் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் டொலர் மூன்றாம் தரப்பினரால் மோசடி செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி நாளை  (05) உரையாற்றவுள்ளார்.

2025 செப்டெம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் திறைசேரியால் செலுத்தப்பட்ட 10 கொடுப்பனவுகளின் மொத்த தொகையான 2.5 மில்லியன் டொலர் மோசடி செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் அரசாங்க நிதி பற்றிய குழுவில் முன்னிலையான திறைசேரியின் செயலாளர் ஹர்ஷன சூரியபெரும பல விடயங்களை வெளிப்படுத்தியிருந்தார்.

குறித்த நிதி மோசடி தொடர்பில் நிறுவன மட்டத்தில் உள்ளக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், குற்றப்புலனாய்வுத் திணைக்களம் ஊடாகவும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக திறைசேரியின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றம் நாளை (04) கூடவுள்ள நிலையில், இந்த நிதி மோசடி விவகாரம் தொடர்பில் நிதி அமைச்சரான அநுரகுமார திசாநாயக்க விசேட உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.