உக்ரைனில் நடைபெற்ற கொலைகளுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் கண்டனம்

திருத்தந்தை பிரான்சிஸ் கண்டனம்

உக்ரைனின் புச்சா நகரில் நடைபெற்ற கொலைகளுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், உக்ரைனின் தேசியக் கொடியை அவர் முத்தமிட்டுள்ளார்.   

உக்ரைனின் நடைபெறும் போர் தொடர்பான சமீபத்திய செய்திகள் நிம்மதியையும் நம்பிக்கையும் அளிப்பதற்கு பதிலாக, புச்சா நகரில் நடைபெற்ற படுகொலைகள் உள்ளிட்ட புதிய கொடுமைகளை ஏற்படுத்தியுள்ளது,” என அவர் தெரிவித்ததாக, ரொய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது.

“பொதுமக்கள், பாதுகாப்பற்ற பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக கொடுமைகள் அதிகரித்துள்ளன” என்றும்  அவர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

திருத் தந்தை பிரான்சிஸ் தனக்கு  புச்சாவிலிருந்து கொண்டு வரப்பட்டதாகக் கூறிய உக்ரைனின் தேசியக் கொடியை பார்வையாளர்களுக்காக விரித்துக்காட்டினார்.

“பாதுகாப்பான நிலத்தை அடைவதற்காக இக்குழந்தைகள் உக்ரைனில் இருந்து இங்கு வந்துள்ளனர். நாம் அவர்களை மறக்கக்கூடாது. உக்ரைன் மக்களை மறக்கக்கூடாது” என தெரிவித்துள்ளதாகவும் ரொய்ட்டர்ஸ் செய்தி முகமை குறிப்பிட்டுள்ளது.