மன்னாரில் மது போதையில் காவல் துறையினர் அட்டூழியம் – மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

492 Views

TapScanner 08 18 2021 21.01 1 மன்னாரில் மது போதையில் காவல் துறையினர் அட்டூழியம் - மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

தலைமன்னார் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை (17) இரவு மது போதையில் சிவில் உடையில் சென்ற  காவல்துறையினர் சிலர் குறித்த வீட்டை உடைத்து சேதப்படுத்தியதோடு அப்பகுதியில் உள்ள பல வீடுகளுக்குச் சென்று அச்சுறுத்தியதாகக் கூறப்படுகின்றது.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட 7 குடும்பங்கள் ஒன்றிணைந்து மன்னார்  காவல் நிலையத்தில் கடமையாற்றும்  காவல் துறையினருக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளனர்.

குறித்த முறைப்பாடு இன்று புதன் மதியம் வவுனியா பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலகம் மற்றும் வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழு போன்றவற்றில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ilakku-weekly-epaper-143-august-15-2021

Leave a Reply