இலங்கையில் இருந்து தமிழக மீனவரின் உடலை சொந்த ஊர் கொண்டு வர நடவடிக்கை எடுக்க அன்புமணி வலியுறுத்தல்

393 Views

மீனவரின் உடலை சொந்த ஊர் கொண்டு வர நடவடிக்கை


இலங்கையில் மீட்கப்பட்ட தமிழக மீனவர் ராஜ்கிரணின் உடலை தமிழகம் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தமது ட்விட்டர் பக்கத்தில் மீனவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சில இடுகைகளையும் பகிர்ந்துள்ளார்.

காரைநகர் கடற்பரப்பிற்குள் நேற்றைய தினம் ஊடுருவிய இந்திய மீன்பிடிப் படகை கடற்படையினர் கைது செய்ய முயன்ற சமயம் கடற்படையினரினதும் மீனவர்களதும் படகு மோதியதில் இந்திய மீனவர்களின் படகு நொருங்கி கடலில் மூழ்கியது.

இதன்போது படகில் இருந்த மூவரில் இருவர் மட்டுமே காப்பாற்றப்பட்டனர். இருந்தபோதும் ஒருவர் காணாமல் போயிருந்தார். இவ்வாறு காணாமல்போன இந்திய மீனவிரின் உடல்  கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மீனவரின் உடலை சொந்த ஊர் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ilakku Weekly Epaper 152 october 17 2021 Ad இலங்கையில் இருந்து தமிழக மீனவரின் உடலை சொந்த ஊர் கொண்டு வர நடவடிக்கை எடுக்க அன்புமணி வலியுறுத்தல்

Leave a Reply