5 முதல் 11 வயதுக்கு இடைப்பட்ட சிறார்களுக்கு அமெரிக்காவில் பைஸர் தடுப்பூசி

122 Views

சிறார்களுக்கு அமெரிக்காவில் பைஸர் தடுப்பூசி

பைஸர் தடுப்பூசியை 5 முதல் 11 வயதுக்கு இடைப்பட்ட சிறார்களுக்குச் செலுத்த அமெரிக்க சுகாதார அதிகாரிகள் அனுமதி வழங்கியுள்ளனர்.

இதற்கமைய, 28 மில்லியனுக்கும் அதிகமான சிறார்களுக்கு அமெரிக்காவில் பைஸர் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

பிரதிபலன் மற்றும் பக்கவிளைவு என்பன தொடர்பாக உயர்மட்ட மருத்துவ ஆலோசனை சபையின் விரிவான மதிப்பீடுகளின் பின்னரே, இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தற்போதுவரை சீனா, சிலி, கியூபா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் முதலான நாடுகள், ஐந்து வயதுக்கு மேற்பட்ட சிறார்களுக்குத் தடுப்பூசி செலுத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ilakku Weekly Epaper 154 october 31 2021 Ad 5 முதல் 11 வயதுக்கு இடைப்பட்ட சிறார்களுக்கு அமெரிக்காவில் பைஸர் தடுப்பூசி

Leave a Reply