இறக்குமதி கட்டுப்பாடு விதிக்கப்பட்ட 369 பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதி

221 Views

இறக்குமதி கட்டுப்பாடு விதிக்கப்பட்ட 369 பொருட்களை இறக்குமதி செய்ய இன்று முதல் அனுமதிக்கப்படுவதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

எனினும், அவற்றிற்கு விதிக்கப்பட்டுள்ள வரிகள் மற்றும் விதிமுறைகள் அமுலில் இருக்கும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் இது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும் பொருட்களை இறக்குமதி செய்யும்போது அவற்றின் தேவையை கருத்திற்கொண்டு நாட்டிற்கு கிடைக்கும் மட்டுப்படுத்தப்பட்ட அந்நிய செலாவணியை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நிதியமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Tamil News

Leave a Reply