வவுனியா நகரில் மண்ணெண்ணெய் மற்றும் காஸ் பெறுவதற்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

188 Views

வரிசையில் காத்திருக்கும் மக்கள்

வரிசையில் காத்திருக்கும் மக்கள்

இலங்கையில் பல மாவட்டங்களில் எரிபொருள் மற்றும் எரிவாயு ஆகியவற்றிற்கான தட்டுப்பாடு தொடர்ந்த வண்ணமே உள்ளது. அந்த வகையில் வவுனியா மாவட்டத்திலும் இவற்றிக்காக இன்றும் (25) மக்கள் பல மணிநேரமாக நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

வவுனியா மாவட்டத்தின் பல எரிபொருள் நிலையங்களில் மண்ணெண்ணெய் நிறைவடைந்துள்ள போதிலும், மாவட்டத்தின் இரு எரிபொருள் மீள் நிரப்பு நிலையங்களில் ஒரு நபருக்கு 1000 ரூபாவிற்கு என்ற அடிப்படையில் மண்ணெண்ணெய் விற்பனை செய்யப்படுகின்றன. இதனையடுத்து குறித்த எரிபொருள் விற்பனை நிலையங்களின் முன்னால் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.

IMG 20220325 WA0063 வவுனியா நகரில் மண்ணெண்ணெய் மற்றும் காஸ் பெறுவதற்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

மேலும், எரிவாயு லிட்ரோ சிலிண்டரை மட்டுப்படுத்தப்பட்ட அளவிலே வழங்கப்படுவதுடன், வவுனியா பழைய பேரூந்து நிலையத்திற்கு முன்பாகவுள்ள எரிவாயு விநியோக முகவரினால் இன்று (25) 40 டோக்கன்கள் வழங்கப்பட்டு அதிகாலை 4.30 மணி தொடக்கம் மக்கள் காத்திருந்து காலை 10.30 மணியளவில் எரிவாயுவினை பெற்றிருந்தனர்.

IMG 20220325 WA0070 வவுனியா நகரில் மண்ணெண்ணெய் மற்றும் காஸ் பெறுவதற்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

இதனால் அரச உத்தியோகத்தர்கள், மற்றும் நாளாந்த வேலைக்கு செல்வோர் என பலரும் நீண்ட நேரம் காத்து நின்று அவற்றைப் பெற்றுக் கொள்ள வேண்டியுள்ளதால் உரிய நேரங்களுக்கு வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply