மட்டக்களப்பு: எரிவாயு மற்றும் டீசல் ஆகியவற்றினைப் பெற்றுக்கொள்ள நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

174 Views

நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் எரிவாயு மற்றும் டீசல் ஆகியவற்றினைப் பெற்றுக் கொள்வதற்கு மக்கள் நீண்ட வரிசையில்  காத்திருக்க வேண்டிய நிலையுள்ளதுடன் தொடர்ச்சியாக எரிவாயு மற்றும் டீசல் விநியோக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சில எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக டீசல் வழங்கும் பணிகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படுகின்றன.

இராணுவத்தின் பாதுகாப்புடன் குறித்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்ற நிலையில் குறித்த எரிபொருள் நிலையங்களில் நீண்ட வரிசைகளில் வாகனங்கள் நின்று எரிபொருளைப்பெறவேண்டிய நிலை காணப்படுகின்றது.

இதேநேரம் இன்று காலை மட்டக்களப்பு நகரின் பயனியர் வீதியில் எரிபொருள் விநியோகம் நடவடிக்கை நடைபெறும் மக்களுக்கு கிடைத்த  தகவல்கள் காரணமாக பெருமளவான மக்கள் கூடியதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

image00014 மட்டக்களப்பு: எரிவாயு மற்றும் டீசல் ஆகியவற்றினைப் பெற்றுக்கொள்ள நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

குறித்த வீதியில் முன்னூறுக்கும் மேற்பட்டவர்கள் நீண்ட வரிசையில் காஸ் சிலிண்டருடன் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்தனர்.  ஆனால் எரிவாயு விநியோகம் நடைபெறவில்லை. நாளை மறுதினம் குறித்த பகுதியில் எரிவாயு விநியோக நடவடிக்கைகள்   முன்னெடுக்கப்படும் என மாவட்ட எரிவாயு விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் எரிவாயு இல்லாத காரணத்தினால் பல உணவகங்கள் மற்றும் சிறிய தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply