மட்டக்களப்பில் பிரதேச செயலகத்தின் முன் மக்கள் போராட்டம்

S7500015 மட்டக்களப்பில் பிரதேச செயலகத்தின் முன் மக்கள் போராட்டம்

மட்டக்களப்பு கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்துடன் வாகரை பிரதேச செயலாளர் பிரிவின் நிர்வாகத்திற்குட்பட்ட புணானை கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவினை இணைப்பது தொடர்பாடன செயற்பாட்டிற்கு  எதிர்ப்பு தெரிவித்து நேற்று பிரதேச மக்கள் செயலகத்தின் முன் மக்கள் போராட்டம் நடத்தினர்.

தமிழ், சிங்களம் என இரு தரப்பு மக்களும் இணைந்து இவ்வாறு எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

தாங்கள் வழக்கமாக கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகத்தின் நிர்வாகத்தின் கீழ் தங்களது அரச நிர்வாக நடவடிக்கையினை மேற்கொண்டு வருவதாகவும் தற்போது கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தின் நிர்வாக நடவடிக்கைக்குள் திடீர் என தங்கள் கிராமம் உள்வாங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது தங்களுக்கு கவலையளிப்பதாக தெரிவித்தே கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகத்தில் இருந்து காணி தொடர்பான எல்லை நிர்ணயக் குழுவொன்று நேற்று  புணானை பிரதேசத்திற்கு சென்று எல்லை நிர்ணயம் தொடர்பான நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil News