எரிபொருள் தட்டுப்பாடு-மட்டுப்படுத்தப்பட்ட விநியோகத்தால் நீண்ட வரிசையில் மக்கள்

281 Views

நீண்ட வரிசையில் மக்கள்

நீண்ட வரிசையில் மக்கள்

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக எரிபொருள் தட்டுப்பாடும் பாரிய பாதக விளைவை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த இரண்டு நாட்களுக்கு பின்னர் திருகோணமலை,முள்ளிப்பொத்தானை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெற்றோல் விநியோகம் இன்று (15) மாலை காவல்துறை பாதுகாப்புடன் இடம் பெற்று வரும் நிலையில் நீண்ட வரிசை காணப்படுகிறது.

இதனால் பல மணி நேரங்களை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் செலவிடப்பட வேண்டியுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். சில வேலை பெற்றோல் முடிவடைந்தால் பாரிய சிக்கல்களை எதிர் நோக்குவதுடன் வெறுங்கையுடன் வீடு திரும்ப வேண்டிய நிலை ஏற்படுவதாகவும் கவலை வெளியிடுகின்றனர்.

இப்படியான சூழ் நிலையில், மோட்டார் சைக்கிள்களுக்கு 1000 ரூபா, முச்சக்கர வண்டி 1500, கார் வேன்களுக்கு 5000 ரூபா என மட்டுப்படுத்தப்பட்ட பெற்றோல் விநியோகம் செய்யப்படவுள்ளதாக பெற்றோலிய கூட்டுத் தாபனத்தின் அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

எனவே பெற்றோல் தட்டுப்பாட்டால் தங்களது அரச சேவை உள்ளிட்ட ஏனைய அத்தியவசிய தேவைகளுக்கு கூட பாரிய நெருக்கடிகளை சந்திக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும்  மக்கள் தெரிவிக்கின்றனர்.

Tamil News

Leave a Reply