சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க பாகிஸ்தான் மற்றும் இலங்கை கலந்துரையாடல்

257 Views

IMG 20210723 WA0036 சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க பாகிஸ்தான் மற்றும் இலங்கை கலந்துரையாடல்

கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கும், கிழக்கு மாகாணத்திற்கு அதிகமான பாகிஸ்தான் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்கும் பாகிஸ்தான் அரசும், இலங்கை அரசும் இணைந்து செயல்படுகின்றன என பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் ஆலய ஊடக பிரதிநிதி ஹல்சும் கைசர் ஜிலானி தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்ட ஊடக சங்க பிரதிநிதிகளை இன்று  திருகோணமலையில் சந்தித்து கலந்துரையாடிய போதே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

கிழக்கு மாகாணத்தில் சுற்றுலா தலங்களை மேம்படுத்துவதற்கும், பத்திரிகை யாளர்களின் உதவியுடன் சுற்றுலா குறித்த ஒரு பத்திரிகையை அச்சிடுவதற்கும் சாத்தியமான நடவடிக்கைகள் குறித்து ஊடகங்களுக்கு பல பட்டறைகள் வழங்குவது குறித்தும் தெரிவித்தார் .

இந்நிகழ்வின் ஞாபகார்த்தமாக, பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தின் ஊடக அலுவலர் திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்கள் சங்கத்திற்கு நினைவு பரிசு பொதியையும் இதன் போது சங்கத்தின் தலைவர் மங்கலநாத் லியனாராச்சியிடம்  வழங்கினார்.

இலக்கு இந்த வார மின்னிதழ் 139

ilakku-weekly-epaper-139-july-18-2021

Leave a Reply