இந்தோனேசியாவில் கிறிஸ்துமசை கொண்டாட சென்றுள்ள 71 ஆயிரம் வெளிநாட்டினர்

227 Views

உலகெங்கும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் கலைக்கட்டிய உள்ள நிலையில், விடுமுறை தினங்களை கொண்டாட கடந்த 7ம் தேதி முதல் 21ம் தேதி வரை 71,416 வெளிநாட்டினர் இந்தோனேசியாவுக்குள் வந்துள்ளதாக அந்நாட்டின் குடிவரவுத்துறை அலுவலகம் தெரிவித்திருக்கிறது. 

சராசரியாக இந்தோனேசியாவின் Soekarno Hatta விமான நிலையம் வழியாக 4,761 வெளிநாட்டினர் நாட்டினுள் நுழைந்துள்ளனர் என விமான நிலையத்தின் குடிவரவுத்துறை அலுவலக தலைமை அதிகாரி முகமது டிட்டோ அன்ட்ரியாண்டோ.

இந்த வெளிநாட்டினர்களில் பெரும்பாலானோர் மலேசியா நாட்டவர்கள் (13,398) ஆவர். அத்துடன் சிங்கப்பூர் (8,189 பேர்),  சீனா (7,689) பேர், கொரியா (4,920 பேர்), ஜப்பான் (4,499 பேர்) இந்தோனேசியாவுக்குள் வந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

2022 ஆண்டு இறுதியின் விடுமுறையை கொண்டாட இந்தோனேசியாவுக்குள் வரும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை ஒன்றரை லட்சத்தை தாண்டும் என கருதப்படுகிறது.

Leave a Reply