எரிபொருள் நிரப்பு நிலையங்களிற்கு அருகில் ஏற்படும் குழப்பங்களை கட்டுப்படுத்த ஆகக்குறைந்த பலத்தை பயன்படுத்த உத்தரவு

324 Views

எரிபொருள் நெருக்கடி காரணமாக எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் ஏற்படும் குழப்பநிலையை கட்டுப்படுத்த ஆகக் குறைந்தளவு பலத்தை பயன்படுத்துமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு காவல்துறையினருக்கு  அறிவுறுத்தியுள்ளது.

எரிபொருள் நெருக்கடி காரணமாக எரிபொருள் நிலையங்களில் இடம்பெறும் ஆர்ப்பாட்டங்கள் எதிர்ப்புகள் போன்றவற்றை கட்டுப்படுத்துவதற்கே ஆகக் குறைந்தளவு பலத்தை பயன்படுத்துமாறு அமைச்சு உத்தரவிட்டுள்ளது.

ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்ற பகுதிகளில் சட்டமொழுங்கை பேணுவதற்காக இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக  அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு இராணுவத்தினரின் உதவியை நாடுவது குறித்தும் ஆராயப்பட்டதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

எனினும் அமைதியாக எதிர்ப்பை வெளிப்படுத்துபவர்களிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படாது என அமைச்சு தெரிவித்துள்ளது.

Tamil News

Leave a Reply