பிரதமர் மஹிந்தவுக்கு வாயில் சத்திரசிகிச்சை

மஹிந்தவுக்கு வாயில் சத்திரசிகிச்சைபிரதமர் மஹிந்தவுக்கு வாயில் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு நேற்று முன்தினம் வாயில் சிறிய சத்திர சிகிச்சை செய்யப்பட்டதாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நீண்ட காலமாக பிரதமரின் பிரத்தியேக மருத்து வராக செயல்பட்டு வரும் மருத்துவர் நரேந்திர பிந்தும் இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டுள்ளார்.

ஐக்கிய இராச்சியத்தில் வசித்துவரும் மருத்துவர் நரேந்திர பிந்த், இலங்கை வரும்போது இந்த சத்திரசிகிச்சையை மேற்கொள்வதாக முன்னரே திட்டமிடப்பட்டிருந்தது என்று அறிய வருகின்றது.

சத்திரசிகிச்சைக்குப் பின்னர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நலமுடன் இருக்கிறார் என்று பிரதமர் அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.