‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணியை ஒழியுங்கள்; ஜனாதிபதியிடம் ஐ. தே. க. கோரிக்கை

87 Views

ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியை இல்லாது ஒழிக்க வேண்டும்நாட்டின் ஒற்றுமைக்கு தீங்கு விளைவிக்கும் ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியை இல்லாது ஒழிக்க வேண்டும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை ஐக்கிய தேசியக் கட்சி கேட்டுள்ளது.

வண. கலகொடை அத்தே ஞானசார தேரர் தலைமையிலான செயலணி தேசி ஒற்றுமையை சீர்குலைத்து வருகின்றது என்றும் அந்தக் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

இது தொடர்பில் நேற்று அந்தக் கட்சி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டவை வருமாறு,

எந்தவொரு புதிய சட்டமும் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும். இதன் பின்னர் நீதி அமைச்சின் – சட்டமா அதிபரின் உதவியுடன் இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாட தெரிவுக்குழு அமைக்கப்பட வேண்டும்.

செயலணி ஒன்றை அமைத்து, அமைச்சரவையில் விவாதிக்காமல், நீதி அமைச்சர், சட்ட மா அதிபரின் அதிகார வரம்பில் இருந்து நடவடிக்கை வேடிக்கைக்குரியது. அத்துடன், ஜனாதிபதியின் செயல் அரசமைப்புக்கு முரணானது.

எனவே, நாட்டின் ஒற்றுமைக்கு பாதகமான ஒரே நாடு ஒரே சட்டம் என்ற ஜனாதிபதி செயலணியை உடனடியாக இல்லாது ஒழிக்க வேண்டும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை கோருகிறோம் – என்றுள்ளது.

புதிய அரசியலமைப்பில் ‘13’ காணாமல் போகுமா? காப்பாற்ற முனையும் தமிழ்க் கட்சிகள் – அகிலன்

இலக்கு மின்னிதழ் 155 நவம்பர் 07 2021 | Weekly Epaper

ilakku Weekly Epaper 155 November 07 2021 Ad 'ஒரே நாடு ஒரே சட்டம்' செயலணியை ஒழியுங்கள்; ஜனாதிபதியிடம் ஐ. தே. க. கோரிக்கை

Leave a Reply