மியான்மரில் இராணுவ ஆட்சி ஏற்பட்டு ஓராண்டு நிறைவு – போராட்டத்தில் ஈடுபட்ட 12 பேர் கைது

 

மியான்மரில் இராணுவ ஆட்சி
மியான்மர் இராணுவ ஆட்சியின் கீழ் கொண்டு வரப்பட்டு ஒரு வருடம் நிறைவடைந்துள்ளது.

மியான்மரில் இராணுவ ஆட்சி மூலம் கடந்த ஆண்டு பிப்ரவரி 1ம் திகதி இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. அத்தோடு ஆங் சான் சூகி உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டு வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டனர்.

இதையடுத்து, மியான்மர் மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர்.

இது வரையில் பாதுகாப்புப் படையினரால் சுமார் 1,500 பேர் கொல்லப்பட்டதாகவும், 8,800 பேர் சித்ரவதை செய்யப்பட்டு காணாமல் போயுள்ளனர் என்றும்  3,00,000-க்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளனர் எனவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில், இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று போராட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையடுத்து, படையினர் 12 பேரை கைது செய்துள்ளனர்.