“ஜனாதிபதியுடன் பேசுவதன் மூலம் எதுவும் நடைபெறப் போவதில்லை”-கோவிந்தன் கருணாகரம்

பேசுவதன் மூலம் எதுவும் நடைபெறப் போவதில்லை

ஜனாதிபதியுடன் பேசுவதன் மூலம் எதுவும் நடைபெறப் போவதில்லை

பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை இல்லாத நிலையில், ஜனாதிபதியினால் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேசி எவ்வாறு ஒரு அரசியல் தீர்வினை முன்வைக்க முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம்  கேள்வி எழுப்பியுள்ளார்.

மட்டக்களப்பு, திருப்பழுகாமத்தில் வைத்தியர் க.விஸ்வலிங்கம் அவர்களின் ‘நோய் நிவாரணி’ நூல் வெளியீடும், சித்த வைத்திய முகாமும் இன்று நடைபெற்றது.

WhatsApp Image 2022 03 20 at 11.25.03 “ஜனாதிபதியுடன் பேசுவதன் மூலம் எதுவும் நடைபெறப் போவதில்லை”-கோவிந்தன் கருணாகரம்

இந்த நிகழ்வில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் கருணாகரம், தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களை அழைத்துப்பேசுகின்றேன் என்று எங்களை அழைத்து எங்களை பகடைக்காய்களாக மாற்றி சர்வதேச அழுத்தங்களை குறைப்பதற்காக ஜனாதிபதி இவ்வாறான நாடகத்தினை நடாத்துகின்றார் என்பதில் தமிழீழ விடுதலை இயக்கம் உறுதியாகயிருக்கின்றது.

இதேபோல சர்வகட்சி மாநாட்டை கூட்ட நடவடிக்கையெடுக்கப்படுகின்றது. சர்வகட்சி மாநாடும் ஒன்றுதான் பாராளுமன்றமும் ஒன்றுதான். அதில் பங்குபற்றுவது குறித்து தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானிப்பார்கள். ஜனாதிபதி தமிழ் மக்களுக்கான தீர்வுக்கான ஒரு பேச்சுவார்த்தையினை நடாத்தவேண்டுமானால் முதலில் தமிழ் மக்களுக்கு இனப்பிரச்சினையுள்ளது அதற்கு தீர்வு வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்ளவேண்டும். ஏற்றுக்கொண்டன் பின்னரே அரசியல் தீர்வு குறித்து பேசமுடியும்.

WhatsApp Image 2022 03 20 at 13.09.53 1 “ஜனாதிபதியுடன் பேசுவதன் மூலம் எதுவும் நடைபெறப் போவதில்லை”-கோவிந்தன் கருணாகரம்

மேலும் ஒரு அரசியல் தீர்வினை இந்த பாராளுமன்றம் ஊடாக கொண்டு வர வேண்டுமானால், அரசியலமைப்பில் மாற்றத்தினை ஏற்படுத்த வேண்டுமானால் பாராளுமன்றத்தின் மூன்றிலிரண்டு பெரும்பான்மையிருக்கவேண்டும். ஜனாதிபதியுடன் இருந்த 30க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் விலகிச் சென்றுள்ள நிலையில் பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையும் இல்லை. எனவே ஜனாதிபதியினால் ஒரு அரசியலமைப்பினை கொண்டுவரமுடியாது.

இந்நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேசி எவ்வாறு ஒரு அரசியல் தீர்வினை முன்வைக்கமுடியும். அவருடன் பேசுவதன் மூலம் எதுவும்  நடைபெறப்போவதில்லை” என்றார்.