வடக்கு மற்றும் தமிழக மீனவரை மோதவைக்க இராஜதந்திர நகர்வுகள் அரசாங் கத்தினால் முன்னெடுக்கப்படு கின்றதா என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சபையில் கேள்வி எழுப்பியுள்ளது.
நேற்று இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் கூட்ட மைப்பின் பாராளுமன்ற உறுப் பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் இந்தக் கேள்வியை கடற் றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் வினவினார்.
இந்திய இழுவைப்படகு பிரச்னைக்கு இரு மாதங்க ளுக்குள் தீர்வு கிடைக்கும் என அமைச்சர் டக்ளஸ் தேவா னந்தா கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் பராளு மன்றில் கூறியிருந்தார். அவரது இந்த கருத்தை சுட்டிக்காட்டிய சார்ள்ஸ் நிர்மலநாதன், கடலுக்கு செல்ப வர்கள் மரணிக்கும் சம்பவங்கள் தற்போதும் இடம்பெறுவதாக ஆதங்கம் வெளியிட்டார்.
அத்தோடு இதனை கண்டு கொள்ளாமல் பிரச்னைக்கு தீர்வை காணாமல் இருப்பது இரு தரப்பையும் மோதவைக் கும் இராஜதந்திர முயற்சியா என்றும் கேள்வியெழுப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் டக்ளஸ் தேவா னந்தா, இராஜதந்திர நடவ டிக்கை என்ற கருத்து அரசியல் உள்நோக்கத்தோடு எழுப்பப் பட்டது எனச் சாடினார். கடந்த 5 வருட ஆட்சியில் எதுவும் செய்யவில்லை என குற்றம் சாட்டிய அமைச்சர், விரைவில் மீனவர்கள் பிரச் னைக்கு தீர்வு கிடைக்கும் என்றும் உறுதியளித்தார்.