ஜனாதிபதி பதவியில் இருக்கும் வரை யார் பிரதமராக வந்தாலும் நாட்டு நிலைமைகளுக்கு தீர்வு காண முடியாது – இம்ரான் எம்.பி

322 Views

“ஜனாதிபதி பதவியில் இருக்கும் வரை யார் பிரதமராக வந்தாலும் நாட்டு நிலைமைகளுக்கு தீர்வு காண முடியாது. கோட்டா அரசாங்கத்தில் தீர்வின்மையே தொடர்கின்றது“ என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த அரசாங்கம், கடந்த அரசாங்கத்தைக் குறை கூறி மத்திய வங்கி கொள்ளையர்களை பிடிப்போம். ஈஸ்டர் தாக்குதல் பிரதான சூத்திரதாரியை கைது செய்வோம் என சொல்லியே ஆட்சிக்கு வந்தவர்களின் தற்போதைய நிலை எந்த நிலையில் தள்ளப்பட்டுள்ளது.

நாட்டின் பிரதான உற்பத்தி பொருட்களில் வீழ்ச்சி கண்டுள்ள இலங்கை நாடு தேயிலை ஆடை உற்பத்தி என்பனவும் இதில் அடங்குகிறது ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிக மோசமாக பாதிப்பை இந் நாட்டு மக்களும் முகங்கொடுத்து செய்வதறியாது இந்த அரசாங்கத்தின் நடவடிக்கைகள் வேடிக்கையாக மாற்றியுள்ளது.

இலங்கை, கடன் வாங்கும் நாடாக மாறியுள்ள நிலையில் சர்வதேச நாணய நிதியம் கூட இந்த கோட்டா அரசு இருக்கும் வரை பேச்சுவார்த்தைக்கு தயார் இல்லை என்றும் கூறியிருக்கிறது. இது போன்ற வெளிநாட்டு தூதுவராலயங்களின் தூதுவர்களும் பேச்சுவார்த்தைக்கு தயாரில்லை என்ற நிலைப்பாட்டில் உள்ளார்கள்.

கடந்த 9ம் திகதி இடம் பெற்ற வன்முறைத் தாக்குதல் கண்டிக்கத்தக்கது. இந்த நேரம் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் அடித்து கொல்லப்பட்டுள்ளார். இதற்கு யார் பொறுப்புக் கூறுவது? பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவர் கொல்லப்பட்டமை தொடர்பில் இங்கிருந்து இனவாத சாயம் பூசி பேசப்பட்டது. ஆனால் இங்கு கொல்லப்பட்ட எந்த மதமோ இனமோ இருந்தாலும் அதை யார் பொறுப்பேற்பது வாய் மூடி மௌனிகளாக இருக்கிறார்கள்.

மக்களுடைய பொருளாதார நெருக்கடிக்கான தீர்வினை பாராளுமன்றில் முன்வைக்கவில்லை. பொருட்களின் நாளாந்த விலை ஏற்றம் வரிசை என பல பிரச்சினைகள் தொடர்கிறது. இதற்கான தீர்வினை முன்வையுங்கள். தீர்வின்மை பெரும் கவலையளிக்கிறது.

எனவே புதிய பிரதம் அவருடைய எதிர்கால திட்டங்கள் தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்” என்றார்.

Tamil News

Leave a Reply