எரிபொருள் இல்லை! இன்று முதல் மின்தடை

இன்று முதல் மின்தடைஇன்று முதல் மின்தடை: பல மின் உற்பத்தி நிலையங்களில் உள்ள எரிபொருள் கையிருப்பு குறைவடைந்துள்ளதால் இன்று இரவு முதல் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என்று இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நீர் மின் உற்பத்தி நேற்று முன்தினம் மொத்த மின் தேவையில் 25 சதவீதமாக குறைந்துள்ளது. அதே நேரத்தில் நிலக்கரி, டீசல் மற்றும் உலை எண்ணெய் மூலம் மின் உற்பத்தி 72 சதவீதமாக அதி கரித்துள்ளது.

தேசிய மின் கட்டமைப்பிற்கு சுமார் 108 மெகாவாட் மின்சாரத்தை சேர்க்கும் சப்புகஸ்கந்த அனல்மின் நிலையம், அதன் இயக்கத்துக்கு தேவையான உலை எண் ணெய் இல்லாததால் முற்றாக இடைநிறுத் தப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், நுரைச்சோலை நிலக் கரி அனல்மின் நிலையத்தின் ஊடாக இழந்த மின்சாரத் திறன் எதிர்வரும் 26ஆம் திகதிக்குள் மீளமைக்கப்படும் என இலங்கை மின்சார சபை நம்பிக்கை தெரிவித்துள்ளது.