தமிழர் விடுதலைக் கூட்டணியினை அபகரிக்க சதி; ஆனந்த சங்கரி

தமிழர் விடுதலைக் கூட்டணியினை அபகரிக்க
தமிழர் விடுதலைக் கூட்டணியினை அபகரிக்க ஒரு குழுவினர் தந்திரமாக
செயற்பட்டுவருவதாகவும் அவர்களை கட்சியின் ஆதரவாளர்களும் மக்களும் நம்பவேண்டாம் என்றும் தெரிவித்து தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழர் விடுதலைக் கூட்டணி ஒரு பாரம்பரியமிக்க கட்சி. இதனை பொய்களை வாரி வழங்கும் ஒரு குழுவினர் தந்திரமாக அபகரிக்கத் திட்டமிட்டு என்மேல் அவதூறு சொல்லி என்னை அவமானப்படுத்தி கட்சி ஆவணங்களையும், அலுவலகத்தையும் அபகரிக்கத் திட்டமிட்டதோடல்லாமல், நாளை நடவடிக்கைக் குழுவைக் கூட்ட இருப்பதாகவும் எதிர்வரும் 29 ஆம் திகதி நடைபெறவிருக்கும் கூட்டத்தில் நியமனங்களை வழங்க இருப்பதாகவும் அறிகிறேன்.

இதில் கலந்துகொள்வது சட்டவிரோதமான செயலாகும். ஆதலால் தயவு செய்து சட்டவிரோதமான இக்கூட்டத்தில் கலந்துகொள்ளாதீர்கள்.

இந்த மோசடிக்கார்களுக்கெதிராக எனது சட்டத்தரணி மூலம் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளேன் என்றும் இந்த மோசடிக்காரர்களை மக்கள் நம்மவேண்டாம் என்றும், அவர்களுடன் எவ்வித தொடர்பும் வைக்க வேண்டாம் என்றும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் அனைத்து ஆதரவாளர்களையும் கேட்டுக்கொள்கிறேன்’ என்று ஆனந்தசங்கரியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil News