இந்திய உதவியில் காங்கேசன்துறை துறைமுக திட்டம்; மாதிரியை பார்வையிட்ட தூதரக அதிகாரி

காங்கேசன்துறை துறைமுக திட்டம்இந்திய கடனுதவி திட்டத்தின்கீழ் முன்னெடுக்கப்பட்டுவரும் காங்கேசன்துறை துறைமுக திட்டப்பணியின் மாதிரி கட்டமைப்பினை பார்வையிடுவதற்காக இந்திய தூதரகத்தின் திருமதி இரினா தாக்கூர் முதல் செயலாளர் (கலாச்சாரம் மற்றும் வர்த்தகம்) லங்கா ஹைட்ரோலிக்ஸ் நிறுவனத்திற்கு விஜயம் செய்தார்.

இவருடன் இலங்கை துறைமுக அதிகாரசபை மற்றும் மீன்பிடி அமைச்சின் சிரேஸ்ட அதிகாரிகளும் கலந்து கொண்டு திட்டப்பணிகள் குறித்து ஆராய்ந்தனர்.

தொடர்புகள் வலுவடைவதற்கும் பொருளாதார செயற்பாடுகள் மேம்படவும் இத்துறைமுக புனரமைப்பு உதவும் என இலங்கைக்கான இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது