இலங்கையின் நலன்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய எந்த செயலும் மேற்கொள்ளப்படமாட்டாது- சீனா

182 Views

இலங்கைக்கு ஒருபோதும் தீங்கிழைக்க மாட்டோம் என சீன வெளியுறவு அமைச்சர், இலங்கை வெளியுறவு அமைச்சர் அலி சப்ரியிடம் உறுதி அளித்துள்ளார்.

இலங்கையின் நலன்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய எந்த செயலும் மேற்கொள்ளப்படமாட்டாது. அத்துடன் நேர்மையான மற்றும் நம்பகமான நண்பராக இருப்பதாக சீனா உறுதியளித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது. சீன அரசவை உறுப்பினரும் வெளிவிவகார அமைச்சருமான வாங் யீ, இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியை கம்போடியாவில் சந்தித்தார்.இதன்போதே அவர் இந்த உறுதியை வழங்கியுள்ளார்.

Leave a Reply