அடுத்த மூன்று வருடங்கள் பயனற்றவையாகவும் திறனற்றவையாகவும் இருக்கும்; அனுரகுமார திஸாநாயக்க

495 Views

அடுத்த மூன்று வருடங்கள் பயனற்றவை
தற்போதைய அரசாங்க நிர்வாகத்தின் அடுத்த மூன்று வருடங்கள் பயனற்றவையாகவும் மூன்று வருடங்கள்- முதல் இரு வருடங்களை விட மிகவும் பயனற்றவையாகவும் திறனற்றவையாகவும் இருக்கும் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

கடந்த இரண்டு வருடங்களாக அரசாங்கம் வெற்றியடையவில்லை என்பதை அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளதாக கட்சியின் தலைவரான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

களுத்துறையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் கதையை மாற்ற முயற்சிப்பது துரதிர்ஷ்டவசமானது எனவும் அவர் தெரிவித்தரர்.

தற்போதைய அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் கணிசமான காலத்துக்கு நாட்டைப் பாதிக்கும் பாரிய பிரச்சினைகளைத் தோற்றுவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நாடு எதிர்கொள்ளும் தற்போதைய பிரச்சினைகள் தற்போதைய நிர்வாகத்தால் மாத்திரமல்லஇ இதற்கு முன்னர் நாட்டை ஆட்சி செய்த அரசாங்கங்களாலும் உருவாக்கப்பட்டவை என்றும் அவர் குறிப்பிட்டார்.

தற்போதைய சமூக பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்க்கஇ முறையான அணுகுமுறை தேவை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வாகனங்களை இயக்க அனுமதித்தால் தொடர்ச்சியாக மின்சாரம் வழங்க முடியாது எனவும் தடையில்லா மின்சாரம் வழங்கினால் வாகனங்களை இயக்க எரிபொருள் கிடைக்காது எனவும் எரிசக்தி அமைச்சர் கூறியதாக அவர் குறிப்பிட்டார்.

தற்போது தினமும் இரண்டு மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படுகிறது. மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்துக்குள் அது மேலும் மோசமடையக் கூடும்.

தற்சமயம் பொதுமக்கள் இருளில் இருப்பதாகவும்இ எரிபொருள் சுத்திகரிப்பு நிலையங்கள் இன்மையால் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள தாகவும் சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூலப்பொருட்களை இறக்குமதி செய்வதில் இருந்து தடுக்கப்பட்டுள்ள நிலையில் பால்மாவை கொள்வனவு செய்வதற்கு பொதுமக்கள் வரிசையில் நிற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எனவே நாடும் மக்களும் தற்போது பாரிய நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர். மேலும் நாட்டை நடத்துபவர்கள் நிதி மோசடி மற்றும் பொது நிதியை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இவ்வாறான முறையில் நாட்டை ஆளமுடியாது எனவும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Tamil News

Leave a Reply