13 க்கு எதிராக தேசிய மக்கள் முன்னணி யாழில் துண்டு பிரசுரம்

யாழில் துண்டு பிரசுரம்13ம் திருத்தத்திற்குள் முடக்கும் சதி முயற்சியை முறியடிக்க அணிதிரண்டு வருமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் யாழில் துண்டு பிரசுரம் விநியோகித்தனர்.

தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை 13 ம் திருத்தத்திற்குள் முடக்கம் சதி முயற்சியை முடியடிக்க அனைத்து தமிழ் மக்களதும் பூரணமான ஆதரவை கோரி தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண நகர் பகுதியில் முண்ணனியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் பிரசன்னத்தோடு துண்டு பிரசுரம் இன்றையதினம் வழங்கப்பட்டுள்ளது.

முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் உட்பட பலரும் இதில் ஈடுபட்டனர்.

இதேவேளையில் இதேகோரிக்கையை முன்வைத்து எதிர்வரும் 30 ஆம் திகதி ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை நடத்துவதற்கும் முன்னணி திட்டமிட்டுள்ளது.

Leave a Reply