அடுத்த மூன்று வாரங்கள் கடினமான காலமாக இருக்கும் – பிரதமர் ரணில்

எரிபொருள் மற்றும் எரிவாயுவை பெறுவது தொடர்பில் அடுத்த மூன்று வாரங்கள் நாட்டிற்கு கடினமான காலமாக இருக்கும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆறு மாதங்களுக்கு நாட்டின் நாளாந்த நடவடிக்கைகளுக்கு சுமார் 5 பில்லியன் டொலர்கள் தேவைப்படுவதுடன், வெளிநாட்டு கையிருப்புகளை பராமரிக்க மேலும் ஒரு பில்லியன் டொலர் தேவை என்றும் இந்த உதவியை வெளிநாட்டில் இருந்து பெற வேண்டும்,எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP) வளர்ச்சி தொடர்பில் இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய ரணில்,

2022 ஆம் ஆண்டில் நாட்டின் வளர்ச்சி 4 முதல் -5 சதவீதமாக இருக்கும் என இலங்கை மத்திய வங்கி (CBSL) கணித்துள்ளது. இதற்கிடையில், சர்வதேச நாணய நிதியம் (IMF) பொருளாதாரத்தில் எதிர்மறையான வளர்ச்சி அதிகமாக இருக்கும் எனவும் 2022ல் பொருளாதாரம் -6.9 சதவீதம் சுருங்கும் என மதிப்பிட்டுள்ளது.

நாட்டில் அடுத்த மூன்று வாரங்களுக்கு எரிவாயு- எரிபொருள் தட்டுப்பாடு நிலவும் என்பதால், பொது மக்கள் இவற்றை மிகுந்த சிக்கனத்துடன் பயன்படுத்வேண்டும்.

மேலும் நாடு தற்போது முகம்கொடுக்கும் நிலைமையை நாம் அனைவரும் அறிவோம். இதிலிருந்து மீற வழமையான செயற்பாடுகளில் இருந்து நாம் புதுமையாக சிந்திக்க வேண்டும். இதற்காக மக்களின் ஒத்துழைப்பையும் நாம் எதிர்ப்பார்க்கிறோம். பொருளாதாரத்தை முன்னெற்ற வேண்டும். ஆனால் இதனால் மட்டும் நாட்டை ஸ்தீரப்படுத்த முடியாது. இதனை இரண்டு- மூன்று நாட்களில் செய்து முடிக்கவும் முடியாது.

எரிபொருளுக்காக 550 மில்லியன் டொலர் தேவைப்படுகிறது. ஆனால் உலகலாவிய ரீதியாக ஏற்பட்டுள்ள நெறுக்கடியால் இவ்வருட இறுதியில் 40 வீதத்தால் எரிபொருள் விலை அதிகரிக்கலாம் எனக் கூறப்படுகிறது.

40 மில்லியன் டொலர் எரிவாயுவுக்காகத் தேவைப்படுகிறது. அடுத்த 3 வாரங்களுக்கு எரிபொருள்- எரிவாயுவுக்காக நாம் பாரிய சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டி ஏற்படலாம். எனவே, அனைத்தையும் சிக்கனமாக பயன்படுத்துமாறு நாம் மக்களிடம் கேட்டுக் கொள்கிறோம். அநாவசியப் பயணங்களை தவிர்க்கவும். எரிவாயு- எரிபொருட்களை பதுக்க வேண்டாம். 3 வாரங்களுக்குப் பின்னர் இவற்றை சிக்கலின்றி பகிர்ந்தளிக்க நாம் நடவடிக்கை எடுக்க முயற்சித்து வருகிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.

Tamil News