மஹிந்த பதவி விலகவுள்ளதாக வெளியான செய்தியில் உண்மையில்லை – பிரதமர் அலுவலகம் மறுப்பு

369 Views

செய்தியில் உண்மையில்லை

பிரதமர் மஹிந்த ராஜபக்ச பதவி விலகவுள்ளதாக வெளியான செய்தியில் உண்மையில்லை என்று பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகியதாக வெளியான தகவல்களில் உண்மை  இல்லை என பிரதமரின் ஊடக செயலாளர் ரொஹான் வெலிவிட்ட தெரிவித்துள்ளார். நாட்டின் ஸ்திரத்தன்மையை கருத்தில் கொண்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச – மஹிந்த ராஜபக்ச இடையே இன்று முக்கிய கலந்துரையாடல் நடைபெற்றிருந்தது.

இதனை அடுத்து தனது பதவி விலகல் கடிதத்தை கோட்டாபய ராஜபக்சவிடம் மஹிந்த கையளித்துள்ளதாக சற்றுமுன்னர் செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply