‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு’ பெயரை உரிமை கோர புதிய கூட்டணி தீர்மானம்

184 Views

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரிலேயே உள்ளூராட்சித் தேர்தலை எதிர்கொள்ள ரெலோ, புளொட் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து உருவாக்கியுள்ள புதிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகி உள்ளூராட்சி தேர்தலை எதிர்கொள்வதாக இலங்கை தமிழரசுக் கட்சி நேற்று பங்காளிக் கட்சிளுக்கு அறிவிதத்து. இதைத் தொடர்ந்து ஏனைய கட்சிகள் இணைந்து புதிய கூட்டமைப்பை உருவாக்கப் பேச்சுகளை முன்னெடுத்து வருகின்றன.

இந்தக் கட்சிகள் ஒன்றாக தமிழ்த் தேசியக் கூடட்மைப்பு என்ற பெயரில் பொதுச் சின்னம் ஒன்றை தெரிவு செய்து உள்ளூராட்சி தேர்தலை சந்திப்பதற்கு இணக்கம் எட்டியுள்ளன என்றும் புதிய கூட்டமைப்பின் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

Leave a Reply