“நான் ஒருபோதும் பதவி விலகமாட்டேன்“-பாதுகாப்பு அதிகாரிகளிடம் கோட்டாபய தெரிவித்ததாக தகவல்

நான் ஒருபோதும் பதவி விலகமாட்டேன்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தான் பதவி விலகப்போவதில்லை என மூத்த பாதுகாப்பு அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 14ம் திகதி மூத்த பாதுகாப்பு அதிகாரிகள் ஜனாதிபதியை சந்தித்தவேளை,“நான் ஒருபோதும் பதவி விலகமாட்டேன்” என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்  என்று கூறப்படுகின்றது.

அரசமைப்பிற்கு உட்பட்ட வகையிலேயே தான் செயற்பட்டுவருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், வரும்18ம் திகதி புதிய அமைச்சரவை பதவியேற்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. புதிய அமைச்சரவையில் பல இளையவர்கள் – புதிய முகங்கள் இடம்பெற்றிருப்பார்கள் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.