தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும், முன்னிலை சோசலிச கட்சிக்கும் இடையில் பேச்சுவார்த்தை

379 Views

முற்போக்கு முன்னணி அலுவலகத்தில் இந்த சந்திப்பு

முன்னிலை சோசலிசக் கட்சி மற்றும் தமிழ் முற்போக்கு முன்னணி கட்சிகளுக்கு இடையில் விசேட சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.

கொஹுவளை, இலக்கம் -28, ஶ்ரீமகா விகாரை மாவத்தையில் அமைந்துள்ள தமிழ் முற்போக்கு முன்னணி அலுவலகத்தில் இந்த சந்திப்பு இன்று இடம்பெற்றுள்ளது.

பொதுமக்கள் போராட்டத்தின் அபிலாசைகளை வென்றெடுப்பது, பொதுமக்கள் மீதான அடக்குமுறை மற்றும் கைது அச்சுறுத்தல்களுக்கு எதிர்வினை ஆற்றுதல், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை முற்றாக ஒழித்தல் போன்ற விடயங்கள் இருதரப்புக்கும் இடையில் கலந்துரையாடப்பட்டுள்ளன.

கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் இருதரப்புக்கும் இடையில் இணக்கப்பாடுகள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

தமிழ் முற்போக்கு முன்னணி சார்பில் அதன் தலைவர் மனோ கணேசன், துணைத் தலைவர் திகாம்பரம், பொதுச் செயலாளர் மற்றும் நகர சபை உறுப்பினர் பிரியாணி குணரத்தின ஆகியோரும் முன்னிலை சோசலிசக் கட்சி சார்பில் அதன் மத்திய செயற்குழு உறுப்பினர்களான புபுது ஜயகொட, சஞ்சீவ பண்டார ஆகியோரும் இந்தக் கலந்துரையாடலில் பங்குபற்றியிருந்தனர்.

Tamil News

Leave a Reply