மகிந்த ராஜபக்சவுக்கு அடைக்கலம் அளிக்கவேண்டும்-மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி

மகிந்த ராஜபக்ச மாலைதீவில் அடைக்கலம் அளிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுக்கவில்லை என  மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி முகமட் நசீட் தெரிவித்துள்ளார்.

இலங்கை விஜயத்தின் போது மகிந்த ராஜபக்சவை சந்திக்கவும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.இலங்கையின் அரசியல் சூழ்நிலையை கருத்தில்கொண்டு மகிந்த தனக்கும் தனது குடும்பத்தவர்களிற்கும் மாலைதீவில் அடைக்கலம் வழங்குமாறு மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார் என வெளியான தகவல்கள் தவறானவை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மாலைதீவு உறவுகளிற்கு பாதிப்பை ஏற்படுத்த விரும்பும் சக்திகள் மாலைதீவில் உள்ளன,என தெரிவித்துள்ள அவர், மகிந்த ராஜபக்ச தொடர்பில் வெளியான தகவல்கள் பொய்யானவை எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும்“இலங்கைக்கு சர்வதேச அளவில் நிவாரண உதவிகளை பெறுவதற்கான ஒருங்கிணைப்பாளராக பிரதமர் ரணில்விக்கிரமசிங்கவினால் சமீபத்தில் நியமிக்கப்பட்ட நசீட் நெருக்கடியான தருணத்தில் இலங்கைக்கு உதவியை பெற்றுக்கொடுக்கவே நான் இங்கு வந்துள்ளேன்-இலங்கையின் உள்விவகாரங்களை இலங்கை மக்கள் தீர்த்துக்கொள்ளவேண்டும் என தெரிவித்துள்ளார்.

முன்னதாக மகிந்த ராஜபக்சவை மாலைதீவிற்கு பாதுகாப்பாக அழைத்துச்செல்லும் நோக்கத்துடனேயே அந்த நாட்டின் முன்னாள் ஜனாதிபதி முகமட் நசீட் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார் என செய்தி  வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. Tamil News

Leave a Reply