சிங்கள மக்களை மட்டுமே பாதுகாப்பதுதான் தேசியமா? கஜேந்திரகுமார் எம். பி. கேள்வி

தேசிய பாதுகாப்பு என்ற விடயத்தில் தேசியம் என்பது என்ன? வெறுமனே சிங்கள மக்களை மட்டுமே பாதுகாப்பதுதான் தேசியமா?” என்று கேள்வி எழுப்பிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், “சிங்களவர்கள் தொடர்ச்சியாகப் பொய்களுக்கு ஏமாந்து வருகின்றமையே இந்த நாடு வீழ்ச்சியடைய காரணம்” என்றும் கூறினார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ் வாய்க்கிழமை இடம்பெற்ற பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற் பாடுகள்) திருத்தச் சட்டமூல இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தில் உரையாற்றுகையி லேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், பயங்கரவாத தடை சட்டத்தில் திருத்தங்களை முன்வைத்துள்ள நிலையில் முக்கிய இரண்டு விடயங் களை அடையாளப்படுத்த வேண்டும். குறிப்பாக தடுப்புக்காவல் காலத்தை குறைந்துள்ளமை மற்றும் நீதிபதி சிறைக்கும், தடுப்பு முகாம்களுக்கும் சென்று தடுப்புக்காவலில் உள்ளவர்களை பார்வையிடுவது போன்றவை சித்திரவதையை தடுக்கும் செயல்பாடாக இருக்கும். ஆகவே இவை இரண்டுமே குறிப்பிடத்தக்க மேம்பாடாகும்.

ஆனால், இவை நடை முறை சாத்தியமாகும் விடயத்திலேயே அதன் தன்மை உறுதிப்படுத்தப்படும். இந்த திருத்தங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பித்த போதிலும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் இது குறித்து அதிருப்தியையே வெளிப்படுத்தியிருந்தார். பொறுப்புக்கூறல் விடயத்தில் கலப்பு நீதிமன்ற முறையை இலங்கை நிராகரித்து உள்ளக பொறிமுறையை வலியுறுத்தியமை, நாட்டின் இன முரண்பாடுகள் விடயத்தில் சட்டம் மற்றும் நீதிப் பொறிமுறையானது ஊழல் மிகுந்ததாக உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியிருந் தார்.

பக்கசார்பு, பாராபட்சம் காணப்படு வதாகவும், இது முழுமையான உள்ளக விசாரணைகளையோ நீதி பொறிமுறை யையோ பலவீனப்படுத்தும் என்றார். தேசிய பாதுகாப்பு என்ற விடயத்தில் தேசியம் என்பது என்ன? வெறுமனே சிங கள மக்களை மட்டுமே பாதுகாப்பது தான் தேசியமா? ஒரு தரப்பை மட்டுமே பாதுகாப்பது தேசியமா அல்லது சகல இன மக்களையும் பாதுகாப்பது தேசி யமா? பெரும்பான்மையின் கருத்துக் களுக்கு முக்கியத்துவம் கொடுத்து தீர் மானம் எடுப்பது தேசியம் ஆகாது. பெரும்பான்மையின் தேவைகளை பூர்த்தி செய்வதை தேசியம் என அர்த்தப்படுத்த வேண்டாம்.

பல்வேறு அடையாளங்கள் இந்த நாட்டில் இருக்கின்ற நிலையில் பல்லினத்தன்மை கொண்ட நாடாக இலங்கை உள்ளதென நாம் கூறுகின்ற நிலையில் இரண்டு மூன்று இனங்கள் இந்த நாட்டில் வாழ்கின்ற சு+ழலில் சகல ரதும் கருத்துக்களும் ஏற்றுக்கொள்ளப் பட்டால் மட்டுமே அது தேசியமாகக் கருதப்படும். ஆகவே, நீங்களே இந்த நாட்டின் உரி மைகளை பறிக்கும் விதமாக செயல்படு கின்றீர்கள் என்பதை எவராலும் மறுக்க முடியாது. இந்த தேசம் ஒரு தரப்பை மட்டுமே ஏற்றுக்கொண்டு ஏனைய தரப்பை நிராகரித்துக் கொண்டுள்ளது.

ஆனால், எம்மை தொடச்சியாக புறக் கணித்து – புறந்தள்ளிக்கொண்டுள்ளீர் கள். இவ்வாறான நிலையில் எவ்வாறு எமது மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். எமது மக்கள் மறுக்கப்படுகின்ற நிலை யில், எமது காணிகள் பறிக்கப்படுகின்ற நிலையில், எமது மத அடையாளங்கள் அழிக்கப்படுகின்ற நிலையில் நாம் என்ன செய்ய முடியும்? பிரதமர் மஹிந்த ராஜ பக்ஷ வடக்குக்கு விஜயம் செய்த வேளை யில் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஜன நாயக ரீதியில் எதிர்ப்பை வெளிப்படுத்தி னர்.

புலம்பெயர் தமிழர்கள் உலகில் பல செல்வந்த நாடுகளில் உள்ளனர், அவர்களிடத்தில் இந்த நாட்டை மீட்கும் செல்வம் உள்ளது. அவர்களை இணைத்துக் கொண்டால் இன்றைய நெருக்கடி நிலைக்கு தீர்வு கிடைக்கும். ஆனால், அதற்கு நீங்கள் இடம் கொடுக்கவில்லை, இனவாதத்தை வளர்த்துக் கொண்டுள் ளீர்கள். இலங்கையில் இனவாதம் பரப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றது. சிங்கள மக்களுக்கு தொடர்சியாக பொய்களை கூறிக்கொண்டுள்ளீர்கள். சிங்கள மக்களிடம் நான் கேட்பது அதுவே, நீங்கள் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டு பொய்களுக்கு ஏமாந்துவருகின்றீர்கள். அதுவே இந்த நாடு வீழ்ச்சியடைய காரணம் என்றார்.

Tamil News