தேசிய புகையிலை தவிர்ப்பு தினம்-இலங்கையில் புகையிலையற்ற வார நிகழ்வுகள் ஆரம்பம்

தேசிய புகையிலை தவிர்ப்பு தினம்

தேசிய புகையிலை தவிர்ப்பு தினம்

இலங்கையில் உள்ள 342சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளிலும் புகையிலையற்ற பிரதேசத்தினை உருவாக்கும் வகையில் இன்றைய தினம் புகையிலையற்ற வார நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்  மருத்துவர் குணசிங்கம் சுகுணன் தெரிவித்தார்.

தேசிய புகையிலை தவிர்ப்பு தினம் நாடளாவிய ரீதியில் அனுஸ்டிக்கப்பட்டுவருகின்றது. இலங்கை சுகாதார அமைச்சும் சுகாதார திணைக்களமும் இணைந்து இந்த நிகழ்வினை ஏற்பாடுசெய்து முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன் மட்டக்களப்பு மாவட்ட பிரதான நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் அதன் பணிப்பாளர் மருத்துவர்  குணசிங்கம் சுகுணன் தலைமையில் நடைபெற்றது.

தேசிய புகையிலை தவிர்ப்பு தினத்தை முன்னிட்டு முன்னெடுக்கப்படும் புகையிலையற்ற பிரதேசத்தினை உருவாக்கும் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் பகுதியில் புகையிலை தவிர்ப்பு பகுதியாக பிரகடனப்படுத்தப்பட்டு அது தொடர்பான அறிவுறுத்தல் பலகையும் திறந்துவைக்கப்பட்டது.

 இதன்போது கருத்து தெரிவித்த மருத்துவர் குணசிங்கம் சுகுணன்,
எமது நாட்டில் புற்றுநோயும் சுவாசப்பிரச்சினை தொடர்பான நோய்களும் பெருமளவில் ஏற்படுத்தும் விடயங்களாக புகைப்பிடித்தலும் புகையிலை தொடர்பான பொருட்கள் என பல காரணிகள் காணப்படுவதையிட்டு இலங்கை அரசாங்கத்தின் சுகாதார அமைச்சு தேசிய புகையிலை தவிர்ப்பு தினம் அனுஸ்டித்துவருகின்றது.

அனேமான புற்றுநோய்களுக்கு இந்த புகைத்தலே முக்கியமான காரணமாக அமைகின்றது.இவற்றினையெல்லாம் நிறுத்தவேண்டிய கடமைப்பாடு எமக்கு உள்ளது.

அந்த வகையில் இலங்கையில் காணப்படும் 342 சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்கள் பிரிவுகளிலும் ஒரு புகையிலையற்ற பிரதேசத்தினை உருவாக்குவதை முதன்மையான நோக்காக கொண்டு இந்த தேசிய புகையிலை தவிர்ப்பு தினம் அனுஸ்டிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் 14சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலும் ஒன்றுக்கு மேற்பட்ட புகையிலை பாவனையற்ற இடங்களை உருவாக்கவுள்ளோம்.அந்த பகுதிகளில் புகையிலை பாவிப்பதோ,விற்பதோ அது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் நிறுத்தப்படும்.இது தொடர்பில் அறிவுறுத்தல்கள்   ஆரம்பித்து சட்ட நடவடிக்கைகள் வரையில் முன்கொண்டு பூர்த்திசெய்யவுள்ளோம்.

இலங்கையினை பொறுத்த வரையில் புகையிலை பாவனையும் சரி, புகைத்தலும் சரி குறைந்துசெல்லும் நிலையினை காணமுடிகின்றது.நாட்டில் 15வீதமான காணப்பட்ட புகைப்பிடித்தல் அளவு 9.1வீதமாக குறைவடைந்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தினை புகையிலை பாவனையற்ற மாவட்டதாக உருவாக்குவாக்குவதற்கு அர்ப்பணிப்புமிக்க விடயமாக கையாளவுள்ளோம்.இதனை மிகவரையில் பார்க்கமுடியம்.

புகையிலை தொடர்பான பொருட்களை விற்பனை செய்பவர்கள் அது தொடர்பான சட்டதிட்டங்களை கையாள்வதில்லை.ஆனாலும் எதிர்காலத்தில் இந்த சட்டதிட்டங்களை நடைமுறைப்படுத்துவதினை நாங்கள்  நூறு வீதம் உறுதிப்படுத்துவோம்.அதனை கவனத்தில் கொள்ளாதவர்களுக்கு எதிராக நட்ட நடவடிக்கைகள் தொடரும்” என்றார்.