சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்களை முறையிடுமாறு சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை வலியுறுத்தல்

efa30af2f78d20ac2089aaf8ce0859ab XL சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்களை முறையிடுமாறு சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை வலியுறுத்தல்

சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்களை முறையிடுமாறு சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் 1929 என்ற துரித தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு முறையிட முடியும் என்றும் அது தெரிவித்துள்ளது.

சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்களை கண்காணிக்கும் நிறுவனங்களுக்கு 15 வீதமான முறைப்பாடுகளே கிடைப்பதாக குறிப்பிட்டுள்ள  சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை,  “தற்போதைய சூழ்நிலையில் வீடுகளிலும் சிறுவர் துஷ்பிரயோகம் இடம்பெறுகின்றன. இது பற்றிய தகவல்கள் உரிய வகையில் கிடைக்காமை கவலைக்குரிய விடயம். சிறுவர்களை துஷ்பிரயோகத்தில் இருந்து பாதுகாப்பது முழுச் சமூகத்தினதும் பொறுப்பாகும். சிறுவர் துஷ்பிரயோகம் பற்றிய தகவல்களை உரிய தரப்பிற்கு வழங்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளது.