100 பௌத்த பிக்குகளுடன் இந்தியா சென்ற நாமல் ராஜபக்ஷ

156 Views

நாமல் ராஜபக்ஷ 100 பௌத்த பிக்குகளுடன் இந்தியா சென்

இந்தியாவின் 29ஆவது சர்வதேச விமான நிலையமான குஷிநகர் விமான நிலையம் இன்று   உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் கலந்து கொள்ள நாமல் ராஜபக்ஷ 100 பௌத்த பிக்குகளுடன் இந்தியா சென்றார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியினால் இந்த விமான நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளதுடன், இந்த திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக விசேட விருந்தினா்களாக இலங்கையைச் சேரந்த சிலரும் பங்குபற்றியுள்ளனர்.

நாமல் ராஜபக்ஷ 100 பௌத்த பிக்குகளுடன் இந்தியா சென்

அமைச்சர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் 100 பௌத்த குருமார்கள் உள்ளிட்ட குழுவினா் இந்நிகழ்வில் கலந்துகொள்வதற்காக சென்றுள்ளனா்.

குஷிநகர் விமான நிலையம் திறப்பு விழாவில் கலந்துகொள்வதற்கான முதலாவது விமானமாக யூல்.எல். 1147 என்ற விமானம் இன்று காலை 5.20 மணியளவில் இலங்கையிலிருந்து பயணித்துள்ளது.

மஹாசங்கத்தினரின் ஆசீர்வாதத்துடன் வஸ்கடுவ கபிலவஸ்து புனித சின்னங்கள் சகிதம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பயணம் ஆரம்பமாகியுள்ளதாக இந்திய உயர்தானியரகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply