Notice: Undefined variable: _SESSION in /home/gi5h742vtw17/public_html/www.ilakku.org/index.php on line 1 ஆப்கான் பொருளாதார வீழ்ச்சி | Save Afghanistan | October 1, 2023
ஆப்கானிஸ்தானின் பொருளாதார பிரச்சினைகள் அண்டை நாடுகளான துருக்கி மற்றும் ஐரோப்பாவை பாதிப்பதுடன் அகதிகள் நெருக்கடியை ஊக்குவிக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு ஆப்கான் பொருளாதாரம் 30% வரை பாதிப்படையும் -இது மில்லியன் கணக்கான மக்களை வறுமையில் தள்ளும் மற்றும் மனிதாபிமான நெருக்கடியை ஏற்படுத்தும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
மேலும் அகதிகளின் பெரும் வருகை அகதிகள்-தங்குமிட நாடுகளில் பொது வளங்கள் மீது சுமையை ஏற்படுத்தலாம், தொழிலாளர் சந்தை அழுத்தங்களுக்கு எரிபொருள் கொடுக்கலாம் மற்றும் சமூக பதட்டங்களுக்கு வழிவகுக்கலாம், சர்வதேச சமூகத்தின் உதவி தேவை என்பதையும் சர்வதேச நாணய நிதியும் வலியுறுத்தியுள்ளது. அத்துடன் ஆப்கான் பொருளாதார வீழ்ச்சி அண்டை நாடுகளை பாதிக்கும் எனவும் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.