179 Views
மியன்மாரின் முன்னாள் அரசு தலைவி ஆங் சான் சூகிக்கு ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கில் மேலும் 7 வருடசிறைத்தண்டனை விதித்து அந்நாட்டு இராணுவ நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
இதன்படி அவருக்கு மொத்தமாக 33 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆங் சாங் சூகி தலைமையில், ஜனநாயக ரீதியாக தெரிவுசெய்யப்பட்ட அரசாங்கத்தை கடந்த வருடம் பெப்ரவரி மாதம் மியன்மார் இராணுவம் கலைத்தது
அதையடுத்து ஆங்சான் சூகிக்கு எதிராக 14 ஊழல் குற்றச்சாட்டு வழக்குகளில் ஆங் சான் சூகிக்கு 26 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.