வங்கதேசத்தில் தஞ்சமடைந்துள்ள மியான்மர் அகதிகள் தீவிரவாதத்தை நோக்கி செல்லக்கூடும்: வங்கதேச வெளியுறவுத்துறை அமைச்சர்

382 Views

வங்கதேசத்தில் தஞ்சமடைந்துள்ள மியான்மர் அகதிகள்

“மியான்மர் அகதிகளை தாயகத்திற்கு திருப்பி அனுப்பும் நடவடிக்கை இன்னும் தொடங்காததால் அவர்கள் விரக்தியடைந்துள்ளனர். பலர் போதை மருந்து, மனித கடத்தல், வன்முறை உள்ளிட்ட வன்முறை செயல்களில் ஈடுபடுகின்றனர்,” என வங்கதேச வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல் மொமன் கூறியுள்ளார்.

இந்தியாவின் அசாம் மாநிலத்தில் நடைபெற்ற ஆசிய நதிகள் மாநாட்டில் பங்கேற்ற அவர், மியான்மர் அகதிகளை திருப்பி அனுப்ப இந்தியா மற்றும் இந்த பிராந்தியத்தில் உள்ள பிற நாடுகளின் உதவியை நாடியிருப்பதாகக் கூறியிருக்கிறார்.

11 இலட்சத்துக்கும் அதிகமான ரோஹிங்கியா அகதிகள மியான்மரில் உள்ள பாதுகாப்பற்ற சூழலினால் வங்கதேசத்தில் உள்ள அகதி முகாம்களில் உள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

ஐ.நா.வின் கூற்றுப்படி, ரோஹிங்கியாக்கள் “உலகிலேயே மிகவும் துன்புறுத்தப்பட்ட சிறுபான்மையினர்” எனக் கருதப்படுகிறது.

Tamil News

Leave a Reply