25 வருடகாலமாக வாழ்ந்தவரை நாடு கடத்தும் கனடா – உறவுகளிடையே பெரும் சோகம்

278 Views

25 வருடகாலமாக வாழ்ந்தவரை நாடு கடத்தும் கனடா

கனடாவில் கடந்த 25 ஆண்டுகளாக வசித்து வந்த ஒருவர் நாடு கடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பங்களாதேஷ் பிரஜையான மொஹமட் மஹாபுஸ் அலாம் என்பரே இவ்வாறு நாடு கடத்தப்பட உள்ளார்.

கடந்த 1996ம் ஆண்டு கனடாவில் அரசியல் புகலிடம் கோரி தஞ்சமடைந்திருந்தார். அவரது அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்ட போதிலும், கடந்த கால் நூற்றாண்டு காலமாக கனடாவில் வாழ்ந்து வந்தார்.

நாடு கடத்தப்படுவதனை எதிர்த்து அலாம் பல தடவைகள் மேன்முறையீடு செய்த போதிலும் அந்த மேன்முறையீடுகள் நிராகரிக்கப்பட்டன. இதன் அடிப்படையில் கடந்த 17ம் திகதி அலாம் நாடு கடத்தப்படவிருந்த போதிலும், கோவிட் தொற்று காரணமாக அவர் நாடு கடத்தப்படவில்லை. இந்த நிலையில், அலாம் இந்த வாரம் நாடு கடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Tamil News

Leave a Reply