இந்தியாவில் கோதுமை, சீனி அடுத்து அரிசி ஏற்றுமதிக்குத் தடை?

அரிசி ஏற்றுமதிக்குத் தடை

கோதுமை, சீனி ஆகியவற்றின் ஏற்­று­ம­திக்­கும் தடை விதித்­துள்­ளது இந்தியா. இந்த வரிசையில் அரிசியும் சேர்த்துக் கொள்ளப்படும் சாத்தியம் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு நடந்தால் உலகளாவிய உணவு பாதுகாப்பில் பெரியளவில் பாதிப்பு ஏற்படும் என்று கருதப்படுகிறது.

உள்நாட்டில் உணவுப் பாதுகாப்பை உறுதிசெய்யும் பொருட்டு இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் சில உணவு வகைகளை ஏற்றுமதி செய்ய தடை விதித்துள்ளன.

கோதுமை, சோளம் போன்றவற்றின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ள நிலையில், அரிசி ஏற்றுமதியில் முதல் இடத்தில் இருக்கும் இந்தியா தடையை அமுல்படுத்தினால் பல மில்லியன் பேர் பஞ்சத்துக்குத் தள்ளப்படுவர் என அஞ்சப்படுகிறது.

Tamil News