முத்துக்குமாரின் தியாகம்: தமிழ் இளைஞர்களுக்கான பாடம் – ஜோஸ்

2009 ஆம் ஆண்டு ஜனவரி 29 அன்று, சென்னை சாஸ்திரி பவனில் முத்துக்குமாரின் தீக்குளிப்பு, ஈழத் தமிழர் உரிமைக்கான ஆதரவுப் போராட் டத்தின் வரலாற்றில் மிக முக்கியமான ஒரு தருணமாக அமைந்தது. இந்திய அரசின் அரசியல் நடவடிக்கைகள் மற் றும் ஈழத் தமிழர்கள் மீதான இனப்படுகொலை  குறித்த அவரது கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக, முத்துக்குமார் தனது தியாகத்தை அர்ப்பணித்தார்.

தீக்குளிக்க தேர்ந்தெடுத்த இடத்தின் முக்கியத்துவம் முத்துக்குமாரின் தீக்குளிப்பிற்கு சாஸ்திரி பவனின் தேர்வு சாதாரணமானதல்ல. இந்திய அரசின் முக்கிய அலுவலகங்கள் அமைந்த அந்த இடம், ஈழத் தமிழர்களின் உரிமைகளை ஒடுக்க சிறிலங்கா அரசுக்கு வழங்கப்பட்ட இராணுவ உதவிகளின் அடையாளமாகவே பார்க்கப்பட்டது. இந்திய அரசின் செயல்பாடுகள் ஈழத் தமிழர்களின் உயிரிழப்புக்கும், உலக நாடுகள் மத்தியில் நிலவிய மௌனத்திற்கும் காரணமாக இருந்ததை முத்துக்குமார் உலகிற்கு அறிவிக்க நினைத்தார்.

முத்துக்குமாரின் இறுதி அறிக்கை

தனது தியாகத்திற்கு முன்பாக, “விதியே! விதியே! என்செய் நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை…?” என்ற அரசியல் கருத்துடன் கூடிய அறிக்கையை முத்துக்குமார் எழுதி, சாஸ்திரி பவனில் இருந்த அனைவருக்கும் வழங்கினார். இதில், இந்திய அரசின் நடவடிக்கைகளை வெளிச்சம் போட்டு காட்டுவதோடு, தமிழர் சமூகத்தை அநீதிக்கு எதிராக எழுப்பும் நோக்கத் தையும் கொண்டிருந்தார்.

தமிழ் சமூகத்தில் ஏற்பட்ட அதிர்வுகள்

முத்துக்குமாரின் தியாகம் தமிழ்நாட்டில் மாணவர்கள், இளைஞர்களிடையே பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. பலர் போராட்டங்களின் முன்னணியில் குதித்து, ஈழத் தமி ழர்களுக்கான உரிமைப் போராட்டத்தில் தீவிர மாக ஈடுபட்டனர். முத் துக்குமாரின் இறுதி அறிக்கையில் “மாணவர்களும் இளைஞர்களும் தனது உடலை துருப்புச்சீட் டாகக் பயன்படுத்த வேண்டும்” என்ற வேண்டுகோள் ஒரு புதிய போராட்ட மனோபாவத்தை உருவாக்கியது.

அரசியல் தலைவர்களின் எதிர்மறை செயல்பாடுகள்முத்துக்குமாரின் தியாகம் ஈழத் தமிழர்களுக்காக போராடுவதாக கூறிய தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களின் உண்மையான நிலைப்பாடுகளை வெளிக்காட்டியது. இவர்கள் முத்துக்

குமாரின் கோரிக்கைகளைப் புறக் கணித்ததுடன், அவருடைய இறுதி வேண்டுகோளான “எனது உடலை துருப்புச்சீட்டாக்கி போராடுங்கள்” என்ற கருத்துக்கு எதிராக செயல் பட்டனர். இது, முத்துக்குமாரின் தியாகத்தின் உண்மையான நோக்கத்தை அவமதிக்கும் விதமாகவும், எதி ராகவும் அமைந்தது.

முத்துக்குமாரின் தியாகத்தின் நீட்சி

முத்துக்குமாரின் தியாகம் தமிழர் உரிமை போராட்டத்தில் மட்டும் அல்லாது, தன்னலமற்ற அர்ப்பணிப்பு மற்றும் சமூக விழிப்புணர்வின் அடையாளமாகவும் மாறியுள்ளது. அவரது தியாகம் தொடர்ந்து நினைவுகூரப்பட்டு, தமிழ் சமூகத்துக்கு வழிகாட்டும் ஒளியாக விளங்குகிறது.

தமிழ் இளைஞர்களுக்கான பாடம்

தற்போதைய தமிழ் இளைஞர்களுக்கு முத்துக் குமாரின் தியாகத்தை எடுத்துச் சொல்வது அவசிய மானது. முத்துக்குமாரின் தியாகம் தேசிய இன உரிமை மற்றும்  நீதியின் உண்மையான அர்த்தத்தை அறிய உதவும். சமூகத்திற்காக தன்னலமின்றி போராடும் நோக்கத்தையும், ஈழத் தமிழர்களுக்கான ஆதரவையும் இளைஞர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். முத்துக்குமாரின் தியாகத்தை மரியாதை செய்வதற்கும், அவரது கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கும், தமிழ்ச் சமூகம் அயராது உழைக்க வேண்டியது அவசிய மாகிறது.

ஜோஸ்