பூகோள நிலைமை தற்போது அமைதியற்ற நிலையில் காணப்படுகின்ற தன்மையில் இரு நாடுகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என வியட்நாம் ஜனாதிபதி டோ லாம் (TO LAM) தெரிவித்தார்.
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி டோ லாம் (TO LAM), இன்று வெள்ளிக்கிழமை (08) இலங்கை பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை நிகழ்த்தியபோதே இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் இலங்கை பாராளுமன்றத்தில் உரையாற்றுவதை பெரியதொரு கெளரவமாக கருதுவதாகவும் இலங்கை அரசாங்கத்துக்கும்,நாட்டு மக்களுக்கும் மனமார்ந்த நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் டோ லாம் (TO LAM) தெரிவித்தார்.



