முள்ளிவாய்க்கால் நினைவு வார அனுஷ்டிப்பு – நவாலி தேவாலயத்தில் இன்று அஞ்சலி

276 Views

முள்ளிவாய்க்கால் படுகொலையை நினைவுகூரும் வகையில் கடைப் பிடிக்கப்பட்டு வரும் முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தின் மூன்றாவது நாள் அஞ்சலி நிகழ்வுகள் இன்று இடம்பெற்று வருகிறது.

யாழ். நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயத்தில் இன்று குறித்த அஞ்சலி நிகழவுகள் இடம்பெற்றது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், உயிர்நீத்த உறவுகளுக்கு ஈகைச்சுடர் ஏற்றி, அகவணக்கத்துடன் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

இதன்போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர்.

முள்ளிவாய்க்கால் படுகொலை

அதே நேரம் மே-18 முள்ளிவாயக்கால் நினைவேந்தல் வார நிகழ்வு இன்றைய தினம்   யாழ்ப்பாணம், சாவகச்சேரியில் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

‘வலி சுமந்த எம் மக்களின் உயிர்காத்த கஞ்சி’ யை நினைவுபடுத்தும் வகையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி  சமைத்து வழங்கப்பட்டிருந்தது.

இதன்போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள், சிவகுரு ஆதீனன குருமுதல்வர் தவத்திரு வேலன் சுவாமிகள் மற்றும் பொது அமைப்புகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றிருந்தனர்.

முள்ளிவாய்க்கால் படுகொலை

அத்துடன் வவுனியா மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களினால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றிருந்தது.

Leave a Reply