முல்லைத்தீவு:தண்ணிமுறிப்பில் 632 ஏக்கர் நிலம் தொல்லியல் துறையினரால் அபகரிப்பு- போராட்டத்திற்கு அழைப்பு

81 Views

RAM 01 முல்லைத்தீவு:தண்ணிமுறிப்பில் 632 ஏக்கர் நிலம் தொல்லியல் துறையினரால் அபகரிப்பு- போராட்டத்திற்கு அழைப்பு

முல்லைத்தீவு குருந்தூர்மலையில் தொல்லியல் துறையினரால் ஆய்வு  நடத்தப்படுவதாக கூறப்பட்டு பின்னர் அங்கிருந்த சிவ ஆலயம் அழிக்கப்பட்டு புத்தர் சிலை வைக்கப்பட்டது அது சிங்கள மக்களுக்கு சொந்தமான பகுதியாக கூறப்பட்டது. இதற்கு அப்பகுதி பூர்வீக மக்கள் வெளிப்படுத்திய கடுமையாக எதிர்ப்பின் காரணத்தினால் அது தற்போது வழக்கில் உள்ளது. ஆனாலும் வழக்கின் உத்தரவுகளை பெரும்பான்மை இனமோ,தொல்லியல் துறையினரோ, இராணுவம் மற்றும் காவல்துறையினரோ மதிப்பதாக இல்லை.  

May be an image of 11 people and text that says 'முல்லைத்தீவ தண்ணிமுறிப்பில் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை ஆக்கிரமிக்கும் பெௌத்த பேரினவாதம் தமிழர் தாயகம் மீது மேற்கொள்ளப்படும் நில ஆக்கிரமிப்புக்கு எதிராக அணிதிரள்வோம் පරාవිලත කවදතා 21.09.2022 (புதன் கிழமை) தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலை தண்ணிமுறிப்பு கிராம மக்கள், குமுளமுனை'

இவ்வாறான சூழ் நிலையில், தண்ணிமுறிப்பில் 632 ஏக்கர் தமிழ் மக்களுக்கு சொந்தமான பூர்வீக காணிகள் கடந்தவாரம் தொல்லியல் திணைக்களத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

எல்லைகளில் திட்டமிட்டு இனப்பரம்பலை மாற்றியமைக்கும் நோக்கோடு தமிழ் மக்களின் சொந்த நிலங்கள்  தொடர்ந்து ஆக்கிரமிக்கப்பட்டுக்கொண்டுள்ளது.

இந்நிலையில், தொல்லியல் துறையினர் மற்றும் பௌத்த மத குருமாரைின் தொடர்ச்சியான நில அபகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து தண்ணிமுறிப்பு கிராம மக்கள் போராட்டத்திற்கு  அழைப்பு விடுத்துள்ளனர்.

“எங்கள் பூர்வீக நிலங்கள் மீது மேற்கொள்ளப்பட்டு ஆக்கிரமிப்பை தடுக்க நாளை இடம்பெறும் போராட்டத்தில் அணிதிரளுமாறு அழைத்து நிற்கின்றோம்” என்று அவர்கள் கூறியுள்ளனர்.

Leave a Reply