பிரேசிலில் 1, 600-க்கும் அதிகமான கர்ப்பிணிகள் உயிரிழப்பு

209 Views

brazils states halt vaccination of pregnant women after rio de janeiro death  பிரேசிலில் 1, 600-க்கும் அதிகமான கர்ப்பிணிகள் உயிரிழப்பு

பிரேசில் நாட்டில் 1,600-க்கு அதிகமான கர்ப்பிணிகள் உட்பட  5.4 இலட்சம் பேருக்கு மேல் கொரோனாவால் உயிரிழந்து  உள்ளனர்.

கொரோனா தொற்றுக் காரணமாக பிரேசிலில் குறைமாத பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

பிரேசில் போதுமான மருத்துவ வசதிகள் இன்மை காரணமாக அதிகளவான கர்ப்பிணித் தாய்மார்கள் உயிரிழந்து வரும் நிலையில் தற்போதைய கொரோனா தொற்று அதிகரிப்பும் பிரேசிலில் கர்ப்பிணித் தாய்மார்கள் அதிகளவில் உயிரிழக்க காரணமாக அமைந்துள்ளது.

உலகளவில் கொரோனாத் தொற்று பதிவான நாடுகளில் 2ம் இடத்தில் பிரேசில் உள்ளது. இருப்பினும் இங்கு 16 சதவீதத்தினருக்கே தடுப்பு மருந்து செலுத்தப் பட்டுள்ளது  எனத் தெரிவிக்கப் படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ilakku-weekly-epaper-140-july-25-2021

Leave a Reply