இலங்கையில் தொடரும் சீரற்ற காலநிலை-ஒன்பது மாவட்டங்களில் 12,000க்கும் அதிகமானோர் பாதிப்பு

54 Views

கடந்த சில நாட்களாக நாட்டில் பெய்து வரும் கன மழை மற்றும் பலத்த காற்றினால் ஒன்பது மாவட்டங்களைச் சேர்ந்த 12,289 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை சீரற்ற காலநிலையினால் மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் நான்கு பேர் காணாமல் போயுள்ளனர்.

2,374 பேர் 15 தற்காலிக தங்குமிடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் உறுதிப்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் சீரற்ற காலநிலையால் 326 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அந்நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

இரத்தினபுரி மாவட்டத்தில் 6,865 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் 216 வீடுகளும் சேதமடைந்துள்ளன.

Leave a Reply