உக்ரைன் அணு மின் நிலையம் அருகே ஏவுகணைகள் வீசப்படுவது ஆபத்தானது – ஐ.நா. எச்சரிக்கை

உக்ரைன் அணு மின் நிலையம் அருகே ஏவுகணைகள் வீசப்படுவது ஆபத்தானது என்று ஐ.நா.  எச்சரித்துள்ளது.

கடந்த பெப்ரவரி 24ம் திகதி உக்ரைன் மீது ரஷ்ய இராணுவம் தாக்குதலை தொடங்கி, இன்று வரையில் தொடர்கின்றது.

 உக்ரைனின் ஜேபரோஜையா நகரில்அமைந்துள்ள அணு மின் நிலையத்தின் அருகே நேற்று முன்தினம் 5 ஏவுகணைகள்  ரஸ்யாவால் ஏவப்பட்டுள்ளன. அதிர்ஷ்டவசமாக அணு மின் நிலையத்துக்கு பாதிப்பு ஏற்படவில்லை.

இந்த விவகாரம் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு சபையில் அவசர கூட்டம் ஒன்று நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் ஐ.நா. பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் பேசுகையில், “தெற்கு உக்ரைனில் அமைந்துள்ள ஜேபரோஜையா அணு மின் நிலையத்தில் ஏவுகணைகள் வீசப்பட்டிருப்பது ஆழ்ந்த கவலை அளிக்கிறது. ரஷ்யாவும் உக்ரைனும் பகுத்தறிவோடு செயல்பட வேண்டும். அணு மின் நிலையங்கள் அருகே போர் நடைபெற கூடாது. அந்த பகுதிகளில் இருந்து ரஷ்யாவும் உக்ரைனும் ராணுவ வீரர்களை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். பேரழிவு ஏற்பட கூடாது” என்றார்.