அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ இந்தியாவுக்கு  பயணம்

407 Views

அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ இந்தியாவுக்கு  பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்தியா இலங்கை மாலைதீவு இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கான தனது சுற்றுப்பயணத்தை ஆரம்பித்துள்ள மைக்பொம்பியோ தான் விமானத்தில் ஏறும் படங்களை டுவிட்டரில் பகிர்ந்துகொண்டுள்ளார். இந்தியா இலங்கை மாலைதீவு இந்தோனேசியா ஆகியநாடுகளுக்கான எனது விமானப்பயணம் ஆரம்பமாகிவிட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவருடன் பாதுகாப்பு செயலாளர் மார்க் டி எஸ்பரும் பயணம் மேற்கொள்கிறார். இந்த சுற்றுப்பயணம் 25-ம் திகதி முதல் 29-ம் திகதி வரை நடைபெறுகிறது.

அமெரிக்காவின் சகாக்களுடன் சுதந்திரமான வெளிப்படையான இந்தோ பசுபிக் குறித்து பகிரப்பட்ட நோக்கத்தை ஊக்குவிப்பதற்காகவே ஆசியாவிற்கான தனது சுற்றுப்பயணம் இடம்பெறுவதாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

நவம்பர் 3-ம் திகதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அவரது இந்த ஆசிய நாடுகளுக்கான சுற்றுப்பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply